×

தி.மு.க. மாணவரணி வீரவணக்க நாள் கூட்டம்

ஈரோடு, ஜன. 24: ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நாளை (25ம் தேதி) ஈரோடு, மணல்மேட்டில் நடக்க உள்ளது. இக்கூட்டத்திற்கு மாநகர செயலாளர் சுப்பிரமணியம் தலைமை வகிக்கிறார். மாணவரணி மாவட்ட அமைப்பாளர் திருவாசகம் வரவேற்கிறார். திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன், ஈரோடு மாவட்ட தி.மு.க. செயலாளர் முத்துசாமி, தலைமை கழக பேச்சாளர் கீரை.வீரமணி ஆகியோர் உரையாற்றுகின்றனர். பொதுக்கூட்டத்தில் தி.மு.க. அனைத்து பிரிவு நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட மாணவரணி அமைப்பாளர் திருவாசகம் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags : DMK Student Weerawansa Day Meeting ,
× RELATED மாநகரில் இன்று மின்தடை