வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கலெக்டர், ஆணையர் சைக்கிள் ஓட்டி பிரசாரம் 250 பேர் பங்கேற்பு

நாகர்கோவில், ஜன.24 :   தேசிய வாக்காளர் விழிப்புணர்வு தினத்தையொட்டி, நாகர்கோவிலில் நேற்று சைக்கிள் பேரணி நடைபெற்றது. கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் செட்டிக்குளம் வழியாக வேப்பமூடு பூங்காவில் நிறைவடைந்தது. இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் கலெக்டர் அரவிந்த் பங்கேற்று சைக்கிள் ஓட்டினார். மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித், மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் வீராசாமி, மாவட்ட வழங்கல் அலுவலர் சொர்ணராஜ், மாவட்ட விளையாட்டு அதிகாரி டேவிட் டேனியல், தேர்தல் தனி தாசில்தார் சேகர் உள்ளிட்டோரும் பங்கேற்று சைக்கிள் ஓட்டினர்.  இந்த பேரணியில் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவர்கள், அண்ணா விளையாட்டு அரங்க நல சங்க இளைஞர்கள், ராணுவ வீரர்கள் என சுமார் 250 பேர்  கலந்து ெகாண்டனர். வாக்களிப்பது உரிமை, வாக்களிப்பது கடமை. ஒற்றை விரல் நீல மையால் உரிமையை மீட்டெடு, வாக்களிக்க பணம் வாங்க கூடாது என்பது போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் வைத்து இருந்தனர்.

Related Stories: