×

டூவீலர் விபத்தில் கொத்தனார் சாவு

தேனி, ஜன. 24 : தேனியில் மோட்டார் சைக்கிளில் சென்ற கொத்தனார் விபத்துக்குள்ளா னதில் உயிரிழந்தார். தேனி அல்லிநகரம் மண்டுகருப்பணசாமி கோயில் அருகே குடியிருப்பவர் வேலுச்சாமி. இவரது மகன் காந்திராஜ்(22) கொத்தனார் வேலை பார்த்து வந்தார். இரு தினங்களுக்கு முன்பு வேலை முடிந்து தனது இருசக்கர மோட்டார் வாகனத்தில் காந்திராஜ் வரும்போது அல்லிநகரம் அருகே வாகனம் தடுமாறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். வேலுச்சாமி அளித்த புகாரின் பேரில் அல்லிநகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Death ,mason ,accident ,
× RELATED அமெரிக்கா பால்டிமோர் பால விபத்தில் 6 தொழிலாளர்கள் பலி!