×

தஞ்சை மாவட்டத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலைய மைதானத்தில் பொருட்காட்சி

தஞ்சாவூர், ஜன.3: தஞ்சாவூர் மாவட்டம் அரசு தொழிற் பயிற்சி நிலைய மைதானத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் அரசுப் பொருட்காட்சியினை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கடந்த டிசம்பர் 27ம் தேதி தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையின்படி செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து மாவட்ட கலெக்டர் வழிகாட்டுதலின்படி, 30.12.2025 முதல் 45 நாட்கள் தஞ்சாவூர் அரசு தொழிற் பயிற்சி நிலைய மைதானத்தில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய அனைத்துத் துறைகளின் திட்டங்களையும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகள் நிறைந்த அரசுப் பொருட்காட்சி நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் மாபெரும் அரசுப் பொருட்காட்சி பெரியவர்களுக்கு ரூ.15, சிறியவர்களுக்கு ரூ.10 நுழைவு கட்டணத்தில் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெற்று வருகிறது. நேற்றைய பொருட்காட்சியை 1,354 பொதுமக்கள் பார்வையிட்டனர்.

 

Tags : Government Vocational Training Institute ,Thanjavur district ,Thanjavur ,Higher ,Minister ,Kovi Chezhiyan ,Public Relations Department ,Government ,Vocational ,Training ,Institute ,Chief Minister of ,Tamil ,Nadu ,Public Relations Department… ,
× RELATED உரிமையாளர், 8 ஆடுகள் வாகனம் மோதி சாவு