×

தங்கக் காசுக்கு பதிலாக தகரம் கொடுக்கும் முதல்வர் கனிமொழி எம்பி குற்றச்சாட்டு

பரமக்குடி, ஜன.24:  பரமக்குடி அருகே சத்திரக்குடியில் போகலூர் ஒன்றிய திமுக சார்பில், ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர்கள் சுப. தங்கவேலன், சத்தியமூர்த்தி, முன்னாள் எம்பி பவானி ராஜேந்திரன், மாவட்ட கவுன்சிலர் முருகேசன் முன்னிலை வகித்தனர். ஒன்றிய பொறுப்பாளர் வழக்கறிஞர் கே.கே.கதிரவன் வரவேற்றார். கூட்டத்தில் மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்பி பேசுகையில், ‘‘தன்னை விவசாயி என்று கூறி விளம்பரப்படுத்தி வருகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. பத்து ஆண்டுகளில் ஒரு விஷயத்திலாவது தமிழகம் வெற்றிநடை போடுகிறதா. அமைச்சர்கள் மீது குட்கா ஊழல், பிளீச்சிங் பவுடர் ஊழல் என பல உலக உள்ளன. இதிலிருந்து அவர்கள் தப்பிக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு எதைச் சொன்னாலும் தலையாட்டி செய்கின்றனர்.

ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு  தங்க காசுக்கு பதிலாக தகரம் கொடுத்தவர்தான் எடப்பாடி பழனிச்சாமி. இதிலிருந்து தெரியும் தமிழகத்தில் என்ன ஆட்சி நடைபெறுகிறது என்று.  ஊழல், பொய், பித்தலாட்டம், இது மட்டுமே அதிமுகவின் சாதனை.
திமுகவினர் நடமாட முடியாது என்கிறார் முதலமைச்சர். அடக்கு முறையை கண்டு அஞ்சாத இயக்கம்தான் திமுக. தேர்தல் முடிவுகள் அதிமுகவினரே வீட்டுக்குள் முடக்கி விடும். அவமானத்தில் வெளியே வரமுடியாது. பதவியால் தான் அதிமுகவினருக்கு மதிப்பும் மரியாதையும். ஆனால், திமுகவுக்கு பதவியில் இல்லாவிட்டாலும் மக்களிடம் மதிப்பும் மரியாதையும் உண்டு. ஆகவே, அதிமுகவினர் பத்திரமாக இருங்கள், சட்டமன்ற தேர்தல் உங்களுக்கு சரியான பாடத்தைப் புகட்டும். வரும் தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் திமுக கூட்டணி அமோகமாக வெற்றி பெறும்’’ என்று பேசினார்.

இதில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திசை வீரன், முன்னாள் அமைச்சர் தமிழரசி, மாநில துணைத்தலைவர் திவாகரன், முன்னாள் இளைஞரணி அமைப்பாளர் சம்பத், மாவட்ட துணைச் செயலாளர் கருப்பையா, ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சத்திய குணசேகரன், துணைத் தலைவர் பூமிநாதன், ஒன்றிய பொருளாளர் குணசேகரன், ஒன்றிய கவுன்சிலர்கள் பாதாள பைரவன்,தேன்மொழி, முருகேஸ்வரி, முன்னாள் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் துரைச்சாமி, தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாவட்ட கவுன்சிலர் முருகேசன் நன்றி கூறினார்.

Tags : Kanimozhi ,
× RELATED பாஜ மீண்டும் ஆட்சிக்கு வந்தால்...