விபத்தில்லா தேசத்தை உருவாக்குவோம்

வட்டார  போக்குவரத்து அலுவலகங்களில் உறுதிமொழி

மதுரை, ஜன. 24: மதுரை மாவட்டத்தில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் வடக்கு, தெற்கு, மையம் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் பகுதி அலுவலகங்களில் சாலை பாதுகாப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் அலுவலர்கள் தலைமையிலும் மற்றும் பகுதி அலுவலகங்களில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் தலைமையிலும் இந்த உறுதி மொழி ஏற்கப்பட்டது. பழகுநர் உரிமம் பெற வந்த நபர்கள், ஓட்டுநர் உரிமம் பெற வந்த பொதுமக்கள், புதிய வாகன பதிவிற்கு வந்த பொதுமக்கள், பிற பணிகளுக்கு வந்தவர்கள் என மாவட்டத்தில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மதுரை மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ‘விபத்தில்லா தேசத்தை உருவாக்குவோம்’ என்று உறுதி மொழி ஏற்றனர். மேலும், ‘சீட் பெல்ட் அணிந்து செல்வேன். சீரான வேகத்தில் செல்வேன். ஓடும் பஸ்ஸில் ஏற மாட்டேன். என் உயிரை பணயம் வைக்க மாட்டேன்’ என உறுதிமொழி ஏற்கப்பட்டது.

Related Stories:

>