தேசிய தலைவர்களின் பிரசாரம் தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தாது அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி

மதுரை, ஜன. 24: தேசிய தலைவர்களின் பிரசாரம் தமிழகத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரை திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள கல்லூரியில் நேற்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. இம்முகாமில் பங்கேற்ற கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார், பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘மதுரையில் 127 நிறுவனங்கள் பங்கேற்ற இந்த தனியார் வேலை வாய்ப்பு முகாமில் ஏராளமானோருக்கு வேலைக்கான ஆனை வழங்கப்பட்டுள்ளது. தேசிய தலைவர்கள் தமிழகத்தில் பிரச்சாரம் செய்வதால், எந்தவொரு தாக்கமும் ஏற்படாது. வேதா இல்லம் திறப்பு குறித்து முதல்வர் உரிய அறிவிப்பு வழங்குவார். தூக்கு மேடைக்கு போன 7 தமிழர்களை ஜெயலலிதா காப்பாற்றினார். 7 தமிழர்கள் விடுதலை எனபது சர்வதேச பிரச்சினையாக உள்ளது. இவர்களை விடுதலை செய்ய முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார்” என்றார்.

Related Stories:

>