நேதாஜி பிறந்தநாள் விழா

மதுரை, ஜன. 24: மதுரை நேதாஜி ரோட்டில் ஜான்சிராணி பூங்காவில் உள்ள நேதாஜி சிலைக்கு நூற்றுக்கும் மேற்பட்ட அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நேதாஜியின் 125வது பிறந்த நாளை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் சங்கச் செயலாளர் மற்றும் நேதாஜி தேசிய இயக்க ஒருங்கிணைப்பாளர் சுவாமிநாதன், ஜேசி மதுரை எக்ஸெல் அமைப்பின் பட்டய தலைவர் ரத்தீஷ்பாபு, அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் ராஜமாணிக்கம், டிஆர்இயு தலைவர் சங்கரநாராயணன், டிஏஎன்ஆர்இசிடிஏ நிர்வாகி மனோகரன், தீபம் நிர்வாகி வெண்ணிலா, தமிழ்நாடு அறிவியல் இயக்க நிர்வாகிகள் பாண்டியராஜன், தினகரன், ராஜேஷ், மலர்ச்செல்வி மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள், தியாகிகள், முன்னாள் ராணுவத்தினர், மாணவர்கள் என பலரும் மாலை அணிவித்தனர்.

உசிலம்பட்டி, ஜன. 24: உசிலம்பட்டியில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125வது பிறந்த நாள் விழா அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி மாவட்ட பொதுச்செயலாளர் ஐராஜா தலைமையில், மாநில பொதுச்செயலாளர் பாஸ்கரபாண்டியன், மாவட்டத்தலைவர் பாண்டி ஆகியோர் முன்னிலையில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி உசிலம்பட்டி தேவர் சிலை முன்புள்ள நேதாஜி திருஉருவப்படத்திற்கும், கரையாம்பட்டி மற்றும் விக்கிரமங்கலத்தில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு, அவரது சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. அதன் பின்பு வீரவணக்கம் கோஷமிட்டு நேதாஜியின் புகழ் குறித்த புகழாரம் நடைபெற்றது. இதில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி நிர்வாகிகள் செல்லம்பட்டி ஒன்றியச் செயலாளர் பாண்டி, குணாலன், கண்ணன், ஆட்டோ மகாராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>