×

தொப்பம்பட்டி திமுக சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம்

ஒட்டன்சத்திரம், ஜன. 24: தொப்பம்பட்டி மேற்கு ஒன்றியம் மேல்கரைபட்டி, கொழுமம்கொண்டான் ஆகிய பகுதிகளில் திமுக சார்பில் மக்கள் கிராமசபை கூட்டம் நடந்தது. மேற்கு மாவட்ட செயலாளர் அர.சக்கரபாணி எம்எல்ஏ தலைமை வகித்தார். கூட்டத்தில் அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற முழக்கத்துடன் தீர்மானம் நிறைவேற்றி, அனைவரும் கையொப்பமிட்டனர். இதில் எம்பி வேலுச்சாமி. மாவட்ட துணைச்செயலாளர் ராஜாமணி, ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், தலைவர் சத்திய புவனா, மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் பொன்ராஜ், ஊராட்சி குழு உறுப்பினர் கிருஷ்ணசாமி, இளைஞரணி அமைப்பாளர் ஹரிஹரசுதன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சின்னச்சாமி, ஊராட்சிமன்ற தலைவர் வாசுகி மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : meeting ,Grama Niladhari ,Thoppampatti DMK ,
× RELATED மக்கள் குறைதீர் கூட்டத்தில் 258 மனுக்கள் பெறப்பட்டது