×

ஒட்டன்சத்திரத்தில் கிரிக்கெட் போட்டி அர.சக்கரபாணி எம்எல்ஏ துவக்கி வைத்தார்

ஒட்டன்சத்திரம், ஜன. 24: ஒட்டன்சத்திரத்தில் தமிழ் புத்தாண்டு, தமிழர் திருநாள், தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி நகர திமுக சார்பில் கிரிக்கெட் போட்டி நடந்தது. மேற்கு மாவட்ட செயலாளர் அர.சக்கரபாணி எம்எல்ஏ விளையாட்டு உபகரணங்களை வழங்கி போட்டியை துவக்கி வைத்தார். இதில் நகர செயலாளர் வெள்ளைச்சாமி, மாவட்ட அவைத்தலைவர் மோகன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஹரிஹரசுதன், துணை அமைப்பாளர் பாண்டியராஜன், மாவட்ட ஆதிதிராவிட நல குழு அமைப்பாளர் திருமலைசாமி, மாவட்ட வழக்கறிஞரணி துணை அமைப்பாளர் ஜெயராஜ், அரசு ஒப்பந்ததாரர் வேலுசாமி, நகர துணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, இளைஞரணி அமைப்பாளர் சதீஷ்பாபு, மாணவரணி அமைப்பாளர் அருண்குமார், வார்டு செயலாளர்கள் செந்தில்குமார், மகுடீஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : cricket match ,Ara Chakrabarty MLA ,
× RELATED ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கடையநல்லூரில் மாவட்ட கிரிக்கெட் போட்டி