குளச்சல், ஜன.3: குளச்சல் அருகே பெத்தேல்புரம் பகுதியை சேர்ந்தவர் விஜயராஜன் (52). கூலித்தொழிலாளி. இவரது மகள் ஸ்டெப்லின் (20). நெல்லை மாவட்டத்தில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்த ஸ்டெப்லின் சம்பவத்தன்று குழிவிளையில் உள்ள தனது தோழி வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். பின்னர் அவர் மீண்டும் வீட்டுக்கு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த விஜயராஜன் தனது மகளை தோழிகள் வீடுகளில் தேடியுள்ளார். எங்கு தேடியும் ஸ்டெப்லின் கிடைக்காததால் இதுகுறித்து குளச்சல் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.

