×

ஆத்தூர் பகுதியில் மழையால் பாதித்தது மக்காசோள பயிர்கள் விவசாயிகள் கவலை

சின்னாளபட்டி, ஜன. 24: ஆத்தூர் பகுதியில் தொடர்மழையால் மக்காச்சோள பயிர்கள் தக்கையாக மாறியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். ஆத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட எஸ்.பாறைப்பட்டி, வண்ணம்பட்டி, வக்கம்பட்டி, மல்லையாபுரம், அக்கரைப்பட்டி பகுதிகளில் மக்காச்சோளம் அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் அமெரிக்கன் படைப்புழு தாக்குதலில் பாதிக்கப்பட்டாலும் குறுகிய கால பயிர், அதிக வருவாய் போன்ற காரணங்களால் இப்பகுதி விவசாயிகள் மக்காச்சோளம் பயிரிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். கடந்த ஆடி மாதம் மக்காச்சோளம் பயிரை இப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிட்டிருந்தனர்.

அவை நன்கு வளர்ந்து கதிர்விட்டு வளர்ந்து வந்த நிலையில் அமெரிக்கன் படைப்புழு தாக்குதல் ஆரம்பித்ததால், பல தோட்டங்களில் மக்காச்சோள பயிர் கருகி வந்தது இந்நிலையில் கடந்த ஒருமாத காலமாக தொடர்மழை பெய்ததால் மக்காச்சோள பயிர்கள் தக்கையாக (சக்கையாக) மாறிவிட்டன. இதனால் விவசாயிகள் கவலையடைந்ததுள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘ஏற்கனவே படைப்புழு தாக்குதலா பாதிக்கப்பட்டு வந்த மக்காச்சோள பயிர்கள் தற்போது தொடர்மழையால் கருப்பு நிறத்தில் தக்கையாக மாறி விட்டன.

Tags : area ,Attur ,
× RELATED தோகைமலை பகுதியில் குறுவை சாகுபடியில் விவசாயிகள் மும்முரம்