×

நேதாஜிக்கு மரியாதை

திண்டுக்கல், ஜன. 24: சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி திண்டுக்கல்லில் பஸ்நிலையம் எம்ஜிஆர் சிலையருகே பார்வர்ட் பிளாக் சார்பில் நேதாஜி படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து கட்சி கொடியேற்றி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். இந்நிகழ்விற்கு மாநில பொது செயலாளர் ஜெயராம் தலைமை வகிக்க, மாவட்ட செயலாளர்கள் பால்பாண்டி, சீனிவாசன், தலைவர் மாயன், பொருளாளர் பாலு, துணை தலைவர் பசும்பொன் வடிவேல், மாவட்ட இளைஞரணி செயலாளர்கள் சேனாதிபதி, மணி, சத்தியநாதன், தொழிற்சங்க செயலாளர் ராஜா மற்றும் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் நேதாஜியின் 125வது பிறந்தநாள் விழாவை துணிச்சல் தினமாக ‘பராக்கிரம் நிவாஸ்’ கொண்டாடமத்திய அரசு அறிவித்தது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றியை தெரிவித்தனர். தொடர்ந்து நேதாஜியின் பிறந்தநாளை இந்தியா முழுவதும் விடுமுறை அளித்து அரசு விழாவாக கொண்டாட வேண்டும். டெல்லியில் நீண்ட நாட்களாக போராடும் விவசாயிகளின் பிரச்சனைகள் உடனடியாக தீர்க்கப்பட வேண்டும்.
 திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேதாஜியின் சிலை நிறுவ வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறு்தப்பட்டன.

Tags : Netaji ,
× RELATED இந்தியாவின் சட்டங்களை மதித்து நடக்க...