×

திண்டுக்கல்லில் நகர, ஒன்றிய செயலாளருக்கு வாக்காளர் பட்டியல் விநியோகம் ஐ.பி.செந்தில்குமார் எம்எல்ஏ வழங்கினார்

திண்டுக்கல், ஜன. 24: திண்டுக்கல் மாவட்ட திமுக கட்சி அலுவலகத்தில் நகர, ஒன்றிய செயலாளர், நிர்வாகிகளுக்கு வாக்காளர் பட்டியல் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கிழக்கு மாவட்ட செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் எம்எல்ஏ கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தொடர்ந்து எம்எல்ஏ கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட நகர, ஒன்றிய நிர்வாகிகளுக்கு வாக்காளர் பட்டியலை வழங்கினார். இதில் மாநில வர்த்தக அணி இணை செயலாளர் ஜெயன், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் காமாட்சி, நகர செயலாளர் ராஜப்பா, ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கணேசன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பிரபாகரன், இளைஞரணி துணை அமைப்பாளர் பிலால் உசேன் மற்றும் நகர, ஒன்றிய நிர்வாகிகள், வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக புதிதாக பதவி அறிவிக்கப்பட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் ஐ.பி.செந்தில்குமாருக்கு சால்வை, மாலை அணிவித்து வாழ்த்துக்கள் பெற்று சென்றனர்.

Tags : city ,union secretary ,Dindigul ,
× RELATED 80 வயது மூத்த குடிமக்களின் வாக்காளர்...