×

ஸ்ரீவில்லிபுத்தூரில் திருவாதிரையை முன்னிட்டு மின்விளக்குகளால் ஜொலிக்கும் கோயில் கோபுரம்: நாளை சிறப்பு வழிபாடு

 

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் வைத்தியநாத சுவாமி கோயிலில் நாளை திருவாதிரை வழிபாடு நடைபெறுவதையொட்டி சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகத்தில் வைத்தியநாத சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் திருவாதிரையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் செய்வார்கள். நாளை திருவாதிரை என்பதால் அதிக பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதி உள்ளிட்ட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

திருவாதிரையை முன்னிட்டு கோயில் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கிறது. இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், ‘திருவாதிரையை முன்னிட்டு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு கோபுரம் மற்றும் கோயில் வளாகம் ஜொலிக்கிறது. இதேபோல் நிரந்தரமாக கோபுரத்திற்கு மின்விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : Srivilliputhur ,Thiruvadhirai ,Vaidyanatha ,Swamy ,Temple ,Vaidyanatha Swamy Temple ,Madavar complex ,Virudhunagar district ,
× RELATED பல்லடத்தில் புறவழிச்சாலை பணி தீவிரம்