×

அனுமந்த வாகனத்தில் நம்பெருமாள் வீதிஉலா திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

திருச்சி, ஜன. 24: திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் செயற்குழு கூட்டம் மாவட்ட பொறுப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்எல்ஏ தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், இறுதி வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் பணிகள் குறித்து மாவட்ட பொறுப்பாளர், நிர்வாகிகளுடன் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துரையாடினார். நாளை வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. ெதாடர்ந்து சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக மாவட்ட ஆக்கப் பணிகள் குறித்து விளக்கினார். கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் கே.என்.சேகரன், வண்ணை அரங்கநாதன், கோவிந்தராஜ், கவிஞர் சல்மா, மாவட்ட, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர் செயலாளர்கள் அணிகளின் அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,Executive Committee Meeting ,Anumantha ,Namperumal Veediula Trichy South District ,
× RELATED திமுக செயற்குழு கூட்டம்