×

திருச்சி தீரன்நகரில் பெண்ணிடம் 5 பவுன் செயின் பறிப்பு

திருச்சி, ஜன.24: திருச்சி தீரன்நகரில் வீட்டின் முன் நின்றிருந்த பெண்ணிடம் 5 பவுன் செயினை பறித்துச் சென்ற இரண்டு மர்மநபர்களை சோமரசம்பேட்டை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி தீரன்நகர் பெரியார் சாலையை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மனைவி ராஜேஸ்வரி (50). இவர் நேற்றுமுன்தினம் வீட்டு முன் நின்று ெகாண்டிருந்தார். அப்போது அங்கு பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள், ராஜேஸ்வரி கழுத்தில் கிடந்த 5 பவுன்செயினை பறித்துச் சென்றனர். செயினை பறித்ததில் அவருக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து புறநோயாளியாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதுகுறித்த புகாரின் பேரில் சோமரசன்பேட்டை போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Trichy ,
× RELATED செயின் பறிப்பை தடுக்க முயன்ற பெண் படுகொலை: டெல்லியில் பரிதாபம்