அதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு நாளை அஞ்சலி மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி நடராஜன் அழைப்பு

திருச்சியில்

திருச்சி, ஜன.24: திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், சுற்றுலாத்துறை அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆணைக்கிணங்க, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எம்பியின் வழிகாட்டுதலின்படி, மொழிப்போர் தியாகிகளுக்கு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக மாணவர் அணி சார்பில் நாளை (25ம் தேதி) காலை 10 மணியளவில் கோர்ட் அருகில் உள்ள எம்ஜிஆர் சிலை அருகிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு தென்னூர் உழவர்சந்தை மைதானத்தில் அமைந்துள்ள மொழிப்போர் தியாகிகள் சின்னசாமி, விராலிமலை சண்முகம் ஆகியோர் நினைவிடத்தில் மாலை அணிவித்து, மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

தொடர்ந்து மாலை 6 மணிக்கு எடத்தெரு, அண்ணாசிலை அருகில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. நிகழ்ச்சியில் நான் (திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன்) மற்றும் என்.ஆர்.சிவபதி, எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் முத்துமணி, முன்னாள் எம்பி, மணவைமாறன், துகிலி நல்லுசாமி, திருச்சி மாநகர் மாவட்ட மாணவர் அணி செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர். ஊர்வலத்தில் அதிமுக நிர்வாகிகள், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், முன்னாள் மற்றும் இன்னாள் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மற்றும் அதிமுக அனைத்து அணியினர், பாசறையை சேர்ந்தவர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள், செயல்வீரர்கள், வீராங்கனைகள் திரளாக கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம். இவ்வாறு அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>