×

விவசாயிகளுக்கு ஆதரவாக

திருச்சி, ஜன.24: புதிய வேளாண் சட்டங்களை ரத்துசெய்யக்கோரி டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து திருச்சியில் பிஎஸ்என்எல் அலுவலகம் முன் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாயிகளுக்கு எதிராக புதிய வேளாண் சட்டங்களை கொண்டுவந்த மோடி அரசின் சர்வாதிகார போக்கை கண்டித்தும், டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் 1.50 கோடி விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் திருச்சியில் ரயில் மறியல் முயற்சி, முற்றுகை போராட்டங்கள் நடந்து வருகிறது. மேலும் இந்த சட்டத்திற்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனாலும் டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் சட்டங்களை திரும்ப ெபற வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் திருச்சி பிஎஸ்என்எல் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. எல்பிஎப் மாவட்ட செயலாளர் ஜோசப்நெல்சன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் தொழிற்சங்கம், சிஐடியூ, கம்யூனிஸ்ட் உள்பட தொழிற்சங்கத்தை சேர்ந்த 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை வரவேற்க...