வெவ்வேறு இடங்களில் திருமணமான 2 பெண்கள் மாயம்

திருச்சி, ஜன.24: திருச்சியில் வெவ்வேறு இடங்களில் திருமணமான 2 பெண்கள் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி கோட்டை நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்தவர் ஷேக்ரசூல். ஆட்டோ டிரைவர். இவரது மனைவி ரெகின்பாத்திமா (25). தம்பதிகளுக்கு மகன், மகள் உள்ளனர். கணவன், மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 20ம் தேதி ரெகின்பாத்திமா தென்னூர் மூலக்கொல்லை தெருவில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றவரை அதன் பின்னர் காணவில்லை. இதுகுறித்து அவரது தந்தை ஜாகிர்ஹுசைன் அளித்த புகாரின்பேரில் கோட்டை காவல்நிலைய இன்ஸ்பெக்டர் சண்முகவேல் வழக்குபதிந்து விசாரித்து வருகிறார்.

மற்றொரு சம்பவம்: திருச்சி அரியமங்கலம் அம்மாகுளம் பாரதியார் தெருவை சேர்ந்தவர் அமிதாபானு. இவரது மகள் நிலோபர் (19). இவருக்கும் சென்னை கும்மிடிபூண்டியை சேர்ந்த முகமது அப்துல் என்பவருக்கும் கடந்த 11 மாதத்திற்கு முன் திருமணம் நடைபெற்றது. முகமதுஅப்துல் அப்பகுதியில் உள்ள டைல்ஸ் நிறுவனத்தில் கூலிவேலை செய்து வருகிறார். இந்நிலையில் நிலோபர் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் கடந்த 2 மாதத்திற்கு முன் திருச்சியில் உள்ள தாய் வீட்டிற்கு வந்தார். நேற்றுமுன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்ற நிலோபர் மாயமானார். இதுகுறித்து அவரது தாய் அளித்த புகாரின் பேரில் அரியமங்கலம் இன்ஸ்பெக்டர் (பொ) பெரியசாமி வழக்குபதிந்து விசாரித்து வருகிறார்.

Related Stories:

>