×

நெல் உலர்த்தும் பணி தனியார் நிறுவனத்தில்

திருச்சி, ஜன.24: பிஐடி 2 பிடிசி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் திருச்சி பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு II போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பது, மதுரையை சேர்ந்தவர் ராஜதுரை. இவரது மனைவி சுவேதா. இருவரும் இணைந்து பிஐடி 2 பிடிசி என்ற நிறுவனத்தை ஆரம்பித்து இதன் தலைமையிடம் டெல்லி என அறிவித்து, சிம்ரன் கபூர், மத்திப்கவூர் என்ற இருவரும் நிறுவனத்தை நடத்தி வருவதாக பொதுமக்களிடம் கூறியுள்ளனர். மேலும் இந்த நிறுவனத்தில் ரமேஷ், மரியசெல்வம், ராஜதுரை ஆகியோரை அலுவலக ஊழியராக நியமித்துள்ளனர்.

மேலும் ரமேஷ்குட்டிமணி, கணேசன், தங்கராஜ், கார்த்திக் ஆகியோர் மூத்த ஏஜெண்டுகள் என அறிவித்து அவர்கள் மூலம் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என அறிவித்து பொதுமக்களிடம் வசூல் செய்துள்ளனர். 100க்கும் மேற்பட்டவர்களிடம் வசூலித்து தலைமறைவாகிவிட்டனர். இதுகுறித்து பொன்னமராவதியை சேர்ந்த முருகேசன் என்பவர் அளித்த புகாரின் பேரில் திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தினர். தற்போது இந்த வழக்கு மன்னார்புரத்தில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் தகுந்த ஆதாரங்களுடன் அலுவலகத்திற்கு நேரில் வந்து புகார் அளிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 0431-2422220 என்ற எண்ணில் தொடர்புகொண்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Paddy ,company ,
× RELATED நடப்பு நவரை பருவத்தில் முதற்கட்டமாக 8...