×

பணம் செலுத்தி ஏமாந்தவர்கள் குற்றப்பிரிவில் புகார் அளிக்கலாம் போலீசார் அழைப்பு தந்தை வாங்கிய கடனைகேட்டு மகனுக்கு அரிவாள் வெட்டு

திருச்சி, ஜன.24: திருச்சியில் ரியல்எஸ்டேட் உரிமையாளர் வாங்கிய கடனுக்கு மகனை அரிவாளால் வெட்டிய ரவுடி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். திருச்சி கருமண்டபம் வசந்தநகரை சேர்ந்தவர் பாண்டியன். ரியல் எஸ்டேட் நடத்தி வருகிறார். இவர் கருமண்டபத்தை சேர்ந்த கிருஷ்ணகுமாரி என்பவரிடம் கடந்த சில மாதங்களுக்கு முன் ரூ.30 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். அசல் மற்றும் வட்டிதொகை கொடுக்கவிலலையாம். இதனால் நேற்றுமுன்தினம் கிருஷ்ணகுமாரி மகன் ரவுடி குமரன் (31), மற்றும் இவரது நண்பர் ஹேமேஸ்வரனுடன் சென்று பாண்டியன் மகன் செல்வகுமார் (26) என்பவரிடம் தந்தை வாங்கிய கடனை வட்டியுடன் திருப்பிச் செலுத்தும்படி கேட்டுள்ளனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ரவுடி குமரன் மறைத்து வைத்திருந்த அரிவாளால் செல்வகுமாரை வெட்டினார். காயமடைந்த செல்வகுமார், கோர்ட் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிந்து ரவுடி குமரன், ஹேமேஸ்வரன் ஆகிய 2 பேரை நேற்று கைது செய்தனர்.

Tags : Criminal Division ,
× RELATED கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர்...