×

ரவுடி உள்பட 2 பேர் கைது மற்றொருவர் கைது ஒருவருக்கு வலை நடந்து சென்ற கடைக்காரரிடம் பணம் பறித்த 2 பேர் கைது

திருச்சி, ஜன.24: திருச்சியில் நண்பருடன் நடந்து சென்ற சூப் கடைக்காரரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.700ஐ பறித்துச் சென்ற இருவரை தில்லைநகர் போலீசார் கைது செய்தனர். திருச்சி உறையூர் சோழ மாநகரை சேர்ந்தவர் ஷாஜகான் (45). இவர் தில்லைநகர் 5வது குறுக்கு தெருவில் சூப் கடை வைத்துள்ளார். நேற்றுமுன்தினம் இரவு தனது நண்பருடன் சேர்ந்து கோட்டை ரோடு சாஸ்திரி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த ரங்கம் ரயில்வே காலனியை சேர்ந்த சரவணன் (35), சுரேஷ் (30) ஆகிய இருவரும் கத்தியை காட்டி மிரட்டி ஷாஜகானிடமிருந்து ரூ.700ஐ பறித்துக்கொண்டு தப்பியோடி விட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிந்த தில்லைநகர் போலீசார் சரவணன், சுரேஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags : Rowdy Another ,
× RELATED கீழே கிடந்த நகை, பணம் போலீசில்...