×

வேளாண் சட்டங்களை கைவிடக்கோரி திருத்துறைப்பூண்டியில் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருத்துறைப்பூண்டி, ஜன.24: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டி ஒன்றியம் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் வேளாண் சட்டத்தை கைவிடக்கோரியும் பெண்களுக்கு மாற்று வேலை வழங்க வேண்டும் , மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 10,000 வேண்டும், மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு இழப்பீடாக ரூ. 30 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருத்துறைப்பூண்டி
புதிய பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றியதலைவர் கவிதா தலைமை வகித்தார் இதில் சங்க மாவட்ட செயலாளர் தமயந்தி., ஒன்றிய செயலாளர் தமிழ்ச்செல்விமற்றும் மாவட்ட குழு உறுப்பினர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர் துணை பொறுப்பாளர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags : Mather ,union protests ,Thiruthuraipoondi ,
× RELATED திருத்துறைப்பூண்டியில் இருந்து சென்னைக்கு கூடுதலாக பஸ் இயக்கம்