காவல்துறையில் மிகை நேரப் பணிகளுக்கு மதிப்பூதியம் 200 ல் இருந்து 500 ஆக உயர்த்தியது போல் எங்களுக்கும் வழங்கவேண்டும்

மன்னார்குடி, ஜன. 24: சென்னை செயிண்ட் தாமஸ் மவுன்ட் ஆயுதப் படை மைதானத்தில் காவல்துறை குடும்பங்களின் சார்பில் பொங்கல் விழா நடைப்பெற்றது. விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்று பேசுகையில், தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்வதற்கு காவல் துறையின் பங்களிப்பு அளப்பரியது என்றும் அதன் காரணமாக ஜெயலலிதா முதல்வராக இருந்த போதும் தற்போதைய அரசும் ஏராளமான நலத்திட்டங்களை செயல் படுத்தி வருவதாகவும் காவல் ஆளினர்களின் மிகை நேரப் பணிகளுக்கான மதிப்பூதியத்தை ரூ. 200ல் இருந்து ரூ. 500 ஆக உயர்த்தி வழங்கப் படும் என அறிவித்தார். ஜெயலிதா முதல்வராக இருந்த போது காவல் துறைக்கு எந்த சலுகைகள் அறிவித்தாலும் அது சிறைத் துறைக்கும் சேர்த்தே அறிவிப்பது வழக்கம்.

இதுக்குறித்து சிறைத்துறையில் பணியாற்றும் சிலர் கூறுகையில், காவல் ஆளினர்களின் மதிப்பூதியத்தை கொரோனா காலத்தில் பணியாற்றிய 5 மாதங்களுக்கான உணவு படியான ரூ.250 இன்று வரை எங்களுக்கு வழங்கப் படவில்லை. எங்களிடம் பிடித்த ஒரு நாள் ஊதியத்தை இன்று வரை எங்களுக்கு திருப்பி அளிக்கவில்லை. தற்போது முதல்வர் அறிவித்த மிகை நேர ஊதியம் ரூ. 500 எங்களுக்கு வழங்கப் படவில்லை. எனவே, மிகை நேர பணிகளுக்காக 200 ல் இருந்து 500 ஆக காவல் துறைக்கு உயர்த்தி வழங்கியதை சிறைத் துறையினருக்கும் வழங்கிட தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என கூறினர்.

Related Stories: