×

வெளியில் செல்லும் போது முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம்

திருவாரூர், ஜன. 24: கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்காக அரசு எடுக்கும் நடவடிக்கைகளு க்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வீட்டை விட்டு வெளியே செல்லும் போது அவசியம் முகக்கவசம் அணிய வேண்டும் என் றும் எதனை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: திருவாரூர் மாவட்டத்தில் கொரோ னோ வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் அனைவரும் கொரோனோ வைரசில் இருந்து பாதுகாத்துக் கொள்ள விழிப்புணர்வுடன் இருந்து அரசு தெரிவிக்கும் பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். வீட்டை விட்டு வெளியே செல்லும் போது அனைவரும் கட்டாயமாக முகக் கவசம் அணிய வேண்டும். அவ்வாறு முககவசம் அணியாதவர்களிடமிருந்து அபரா தம் வசூலிக்கப்படும்.

பொது மக்கள், கூட்டம் நிறைந்த இடங்களுக்கு தேவையில்லாமல் செல்வதை தவிர்க்க வேண்டும். பொது மக்களுக்கிடையே சமூக இடைவெளியை கடைப் பிடிக்க வேண்டும். ஒரு நாளைக்கு ஐந்து முறைக்கு குறையாமல் சோப்பு கொண்டு கை சுத்தம் செய்ய வேண்டும். நுரையீரல் சம்பந்தமான நோய்கள் உள்ளவர்கள், இருமல் உள்ளவர்கள் கூட்டம் நிறைந்த இடங்களுக்கு செல்ல வேண்டாம். பயணம் செய்யும் போதும், இதர வாகனங்களில் பயணிக்கும் போதும் முகக்கவசம் அணிய வேண்டும். வணிக வளாகங்கள், வர்த்தக நிறுவனங்கள், கடைகள், மற்றும் வழிபாட்டு தளங்கள் அனைத்திலும் கட்டாயமாக முககவ சம், சமூக இடைவெளி, கிருமிநாசினி ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும். மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நோய் பரவுவதை தவிர்க்க அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும். இவ்வாறு கலெக்டர் அதில் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED உசிலம்பட்டி அருகே பள்ளத்தில் சரிந்த...