எச்சரிக்கை வேளாண் சட்டதிருத்தங்களை ரத்து செய்யக்கோரி திருவாரூரில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு தர்ணா போராட்டம்

திருவாரூர், ஜன. 24: வேளாண் சட்டதிருத்தங்களை கண்டித்து அனைத்து தொழிற்சங்க கூட்டமைப் பினர் திருவாரூரில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டதிருத்தங்கள் மூலம் விவசாயத்தையும் , விவசாயிகளை யும் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங் களிடம் அடகு வைக்க முயற்சிப்பதை கண்டித்தும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், மத்திய மாநில அரசுகளின் விவசாய தொழிலாளர் விரோத போக்கினை கண்டித்தும் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் திருவாரூர் புதிய ரயில் நிலையம் அருகே தர்ணா போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்திற்கு ஏஐடியூசி மாவட்ட தலைவர் குணசேகரன், சிஐடியூ மாவட்ட தலைவர் மாலதி, தொமுச மாவட்ட தலைவர் குருநாதன் ஆகியோர் தலை மை வகித்தனர். கோரிக்கைகளை வலியுறுத்தி, தொமுச மாவட்ட பேரவை துணை செயலாளர் ராம கலைச்செல்வன், சிஐடியூ மாவட்ட செயலாளர் முருகையன், மாவட்ட துணை செயலாளர் அனிபா, ஏஐடியூசி மாவட்ட செய லாளர் சந்திரசேகர ஆசாத், தொமுச மாவட்ட செயலாளர் மகாதேவன் ஆகிய யோர் பேசினர்.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய மாநில அரசுகளின் தொழி லாளர் விவசாய விரோத போக்கினை கண்டித்தும், வேளாண் சட்ட திருத் தங்களை திரும்ப பெறக்கோரியும் கோஷங்களை எழுப்பினர்.

Related Stories: