அம்மாப்பேட்டை வட்டாரத்தில் நெற்பயிர்கள் பாதிப்பு கணக்கெடுப்பு பணி முறையாக நடக்கிறதா?

பாபநாசம், ஜன.24: பாபநாசம் அருகே அம்மாப் பேட்டை வட்டாரத்தில் வட கிழக்குப் பருவ மழையினால் பாதிப்படைந்த நெற் பயிர்களை, மாநில திட்டங்களுக்கான துணை இயக்குநர் கோமதிதங்கம், பயிர் காப்பீடு உதவி இயக்குநர் சுதா ஆகியோர் ஆய்வு செய்தனர். தஞ்சாவூர் அடுத்த மாரியம்மன் கோயில் ஆலங்குடியில் பயிர் சாகுபடி பரப்பு அடங்கலில் விவசாயி வாரியாக பதிவுச் செய்யப்பட்டுள்ளதா, பதிவுச் செய்யப்பட்டுள்ள பரப்புகளில் பாதிப்பு விபரம் சரியாக கணக்கெடுக்கப்பட்டு வருகின்றதா போன்றவற்றை கிராம கணக்குகளையும், விவசாயிகள் மற்றும் பாதிப்பு வயல்கள் ஆகியவற்றையும் சரிப்பார்த்து ஆய்வு செய்தனர். பயிர் பாதிப்பு விபரங்கள் உடனே படிவம் 1ல் பதிவேற்றம் செய்யப்பட்டு தாலுகா அலுவலகம் மூலமாக மாவட்ட பேரிடர் மேலாண்மை அலுவலகத்திற்கு அனுப்பப்பட வேண்டும் என்று விஏஓ, உதவி வேளாண் அலுவலரிடம் தெரிவித்தனர். ஆய்வின் போது ஆலங்குடி ஊராட்சி தலைவர் புண்ணிய மூர்த்தி, விஏஓ பூபதி ஆகியோர் உடனிருந்தனர். ஏற்பாடுகளை அம்மாப் பேட்டை வேளாண் உதவி இயக்குநர் சுஜாதா செய்திருந்தார்.

Related Stories: