சம்பா அறுவடை மும்முரம் கொள்முதல் நிலையங்களில் தகுதியானவர்களை பணி நிரந்தரப்படுத்த வேண்டும்

தஞ்சை, ஜன.24: நுகர்பொருள் வாணிப கழக கொள்முதல் ஏஐடியூசி பணியாளர்கள் கூட்டம் தஞ்சாவூர் ஏஐடியூசி அலுவலக கூட்டரங்கில் மாநில நிர்வாக குழு உறுப்பினர் அய்யப்பன் தலைமையில் நடைபெற்றது. ஏஐடியூசி மாநில பொதுச் செயலாளர் சந்திரகுமார், மாநில பொருளாளர் கோவிந்தராஜன், மாநில நிர்வாக குழு உறுப்பினர் சரவணன், திருச்சி கருணாகரன் மற்றும் பாலச்சந்திரன், மோகன், சாமிநாதன், செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 2012 முதல் கடந்த 10 ஆண்டுகளாக நெல் கொள்முதல் நிலையங்களில் பணிபுரிந்து வரும் பணியாளர்களை நிரந்தரப்படுத்த தகுதியான பணியாளர்கள் பட்டியல் பெற்று ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும் தேவையில்லாமல் நிர்வாகம் காலம் கடத்தி வருகிறது. தகுதியுள்ளோர் பட்டியலில் உள்ள அனைவரையும் உடன் நிரந்தரப் படுத்த வேண்டும்.

நிரந்தர பணியிடங்களுக்கு ஊழலுக்கு வழிவகுக்கின்ற நேரடி நியமனத்தை கைவிட்டு கீழ்நிலையில் பணிபுரிகின்ற தகுதியுள்ள பணியாளர்களுக்கு பதவி உயர்வு அளித்து நிரப்பிட வேண்டும். நெல் கொள்முதலுக்கு தளவாட சாமான்கள் சாக்கு, சணல் உள்ளிட்ட பொருட்களை கொள்முதல் அலுவலர் பொறுப்பில் வழங்க வேண்டும். நெல் கொள்முதலுக்கான முன்னேற்பாடுகளை காலத்தில் மேற்கொண்டு விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை தடங்களின்றி குறைபாடுகளின்றி கொள்முதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறோம் .போராடுகின்ற விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று வேளாண் சட்டத்தை மத்திய அரசு உடனே திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: