×

ஏஐடியூசி பணியாளர்கள் கோரிக்கை பாபநாசம் பகுதியில் சேதமடைந்த பயிர்கள் கணக்கெடுப்பு ஆய்வு

பாபநாசம், ஜன.24: அம்மாப் பேட்டை வட்டாரத்தில் நடப்பு சம்பா, தாளடி பருவத்தில் சுமார் 15 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் நெற் பயிர் சாகுபடிச் செய்யப்பட்டிருந்தது. டிசம்பர் 25 முதல் ஜனவரி 15 வரை பருவம் தவறி பெய்த கனமழையால் அறுவடை நிலையில் இருந்த பெருவாரியான வயல் பரப்பு மழையில் மூழ்கியும், கதிர்கள் முளைத்தும் பாதிப்படைந்துள்ளன. பாதிப்படைந்த வயல் பரப்பினை வேளாண் துறை அலுவலர்கள், வருவாய் துறை அலுவலர்கள் இணைந்து கணக்கெடுப்பு பணி மேற் கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பாபநாசம் தாசில்தார் சுஜாதா, அம்மாப் பேட்டை வேளாண் உதவி இயக்குநர் சுஜாதா ஆகியோர் அம்மாப் பேட்டை அருகே ஒன்பத்துவேலி, திருக்கருக்காவூர், இடையிருப்பு, மெலட்டூர், புளியக்குடி, வடபாதி, அருந்தவபுரம், ராராமுத்திரக்கோட்டை உள்ளிட்ட கிராமங்களில் பயிர் பாதித்த வயல்களையும், கணக்கெடுப்பு பணிகளையும், ஆவணப்படுத்தும் பணிகளையும், ஆய்வு செய்தனர்.

Tags : AITUC ,area ,Papanasam ,
× RELATED இந்தியா கூட்டணிக்கு தொழிற்சங்கங்கள் ஆதரவு