பொன்.புதுப்பட்டி அரசு மகளிர் பள்ளியில் 117 மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கல்

பொன்னமராவதி, ஜன. 24: பொன்னமராவதியில் உள்ள பொன்.புதுப்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 117 மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியர் நிர்மலா தலைமை வகித்தார்.

தமிழாசிரியர் சுதா வரவேற்றார். மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் பழனியாண்டி, ஆசிரியர் விஜயலட்சுமி வாழ்த்தி பேசினர். தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய தலைவர் வைரமுத்து பங்கேற்று 117 மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கினார். முன்னாள் பேரூராட்சி தலைவர் ராஜா, கூட்டுறவு சங்க தலைவர்கள் ராஜேந்திரன், அம்பி, பழனியப்பன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். திருமயம்:  அரிமளம் ஒன்றியம் கடியாபட்டி ஊராட்சியில் செயல்பட்டு வரும் உலகப்பர் மேல்நிலைப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் இளவரசு தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் உமா மகேஸ்வரி சோமசுந்தரம் பங்கேற்று மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கினார். நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர் சோமசுந்தரம், ஊராட்சி துணைத்தலைவர் போஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories: