மனிதநேய மக்கள் கட்சி முடிவு பெரம்பலூர் பெரம்பலூரில் போலி மது கடத்தி வந்த 3 பேர் கைது

பெரம்பலூர், ஜன.24: பெரம்பலூரில் போலி மதுபாட்டில்களை கடத்தி வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். பெரம்பலூர் டவுன் போலீஸ் சரக எல்லைக்குட்பட்ட கோனேரிபாளையம் 4 ரோடு பகுதியில் பெரம்பலூர் சப்-இன்ஸ்பெக்டர் ராம்குமார் மற்றும் அவரது குழுவினர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது, போலி மதுபாட்டில்களை கடத்திச் சென்றது தெரிய வந்தது. 3 பேர்களையும் பிடித்து வந்து விசாரணை நடத்தியதில் அவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டம், நைனார் பாளையம் கிராமத்தை சேர்ந்த நடராஜன் மகன் ரத்தினகுமார்(55), சேலம் மாவட்டம், வீரகனூர் தாலுகா, வி.ரா மநாதபுரம் கிராமம், சிற்றம் பலம் மகன் வினோத்ராஜ் (27), பெரம்பலூர் மேட்டுத் தெரு, ரெங்காநகர், ரவி மகன் ஜீவா என்கிற விக்கி(23) ஆகியோர் என்பது தெரிய வந்தது. 3 பேர்கள் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்த பெரம்பலூர் போலீசார் அவர்களிடம் இருந்து 240 மதுபாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப் பட்ட கார் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>