அரியலூர் மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை வளா்ச்சி திட்டப்பணிகள்

அரியலூர், ஜன.24: அரியலூர் மாவட்டம் அரியலூர் மற்றும் திருமானூர் ஆகிய வட்டாரங்களுக்குட்பட்ட பார்பனச்சேரி, கண்டிராதீத்தம் ஆகிய கிராமங்களில் தோட்டக்கலைதுறை மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட திட்டங்களை கலெக்டர்.ரத்னா பார்வையிட்டு ஆய்வு செய்தார் ஆய்வின்போது, மானாவாரி பகுதி வளா்ச்சி ஒருங்கிணைந்த பண்ணைத் திட்டத்தின்கீழ் திருமானூர் ஒன்றியத்தில் 100 விவசாயிகள் பயன்பெறும் வகையில் 100 ஹெக்டோ் பரப்பளவில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு மானியமான ரூ.60 ஆயிரம் உட்பட ரூ.1 லட்சத்து 58 ஆயிரம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் தோட்டக்கலை பயிர் மற்றும் ஊடு பயிர், 1 மாடு, 5 ஆடுகள், 10 கோழிகள், மண்புழு உர தயாரிப்புக்கூடம், தேனீவளா–்ப்பு, கால்நடை தங்குமிடம் மற்றும் உரக்குழி உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டு, அதன் மூலம் விவசாயிகள் பயன்பெற்று வருவதை பார்வையிட்ட கலெக்டர் தமிழக அரசு தோட்டக்கலைத்துறையின் மூலம் கிராம பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் விவசாயிகளுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை முறையாக பயன்படுத்திக்கொண்டு தங்கள் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திக் கொள்ள விவசாயிகளுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், விவசாய நிலத்தில் பயிர் செய்யப்பட்டிருந்த மரவள்ளி கிழங்கு, சேனைக்கிழங்கு, மஞ்சள் மற்றும் புடலங்காய், பீர்க்கங்காய் பயிர்களை பார்வையிட்டார். மேலும், விவசாய நிலத்தில் தேனீ வளர்ப்பு பெட்டிகள் மூலம் தேன் உற்பத்தி செய்வதை ஆய்வு செய்த கலெக்டர் நாள் ஒன்றுக்கு உற்பத்தி செய்யப்படும் தேன் அளவு குறித்தும் கேட்டறிந்தார்கள். ரூ.3 இலட்சத்து 55 ஆயிரம் மதிப்பீட்டில் மானாவாரி பகுதி அபிவிருத்தித் திட்டத்தின்கீழ் 1000 சதுர மீட்டர்பரப்பளவில் அமைக்கப்பட்டிருந்த நிழல்வளை கூடாரத்தை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் அவர்கள், இக்கூடாரத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள் குறித்தும், இதன் மூலம் கிடைக்க பெறும் நன்மைகள் குறித்தும் விவசாயிடம் கேட்டறிந்தார். ஆய்வின் போது, தோட்டக்கலை துணை இயக்குநர் அன்புராஜன், வேளாண்மைத்துறை துணை இயக்குநா் பழனிசாமி, கலெக்டரின் நோ்முக உதவியாளா் (வேளாண்) தோட்டக்கலை உதவி இயக்குநர் பிரவீன், துணை தோட்டக்கலை அலுவலர் சிலம்பரசன் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர்கள், வேளாண்மைத்துறை அலுவலாக்ள் உட்பட பலா் உடனிருந்தனர்.

Related Stories: