பொதுமக்கள் எதிர்பார்ப்பு டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

அரியலூர், ஜன.24: டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக அரியலூர் அண்ணா சிலை அருகே ஏஐடியூசி, சிஐடியூ, தொமுச, ஐஎன்டி–்யூசி உள்ளிட்ட தொழிற்சங்க அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில், இந்திய நாட்டு விவசாயிகளை பாதிக்கக்கூடிய மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தி டெல்லியில் பல நாட்களாக போராடி வரும் விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் பேசினர். ஆர்ப்பாட்டத்திற்கு ஏஐடியூசி மாவட்ட பொதுச் செயலாளர் தண்டபாணி, தொமுச மாவட்ட தலைவர் மகேந்திரன், சிஐடியூ மாவட்ட செயலாளர் துரைசாமி, ஐஎன்டியூசி மாவட்ட தலைவர் விஜயகுமார் ஆகியோர் தலைமை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஏஐடியூசி தனசிங், விவசாயிகள் சங்கம் ஆறுமுகம், தொமுச சட்டநாதன், கனகராஜ், சின்னையன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வரும் 26ம்தேதி குடியரசு தினத்தையொட்டி டூவீலர் வாகனத்தில் தேசிய கொடி ஏந்தி அரியலூர் தேரடியில் புறப்பட்டு அண்ணா சிலை அருகே அடைந்து தேசிய கொடி ஏற்றி உறுதிமொழி எடுத்துக் கொள்வது என்கின்ற வேண்டுகோளோடு ஆர்ப்பாட்டம் முடிவுற்றது.

Related Stories:

>