புதிய வேளாண் சட்டத்தை கண்டித்து அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை, ஜன. 24: புதிய வேளாண் சட்டங்களை கைவிடக்கோரி மயிலாடுதுறை தாசில்தார் அலுவலகம் முன் அனைத்து தொழிற்சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொமுச மாவட்ட தலைவர் பொன்நக்கீரன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் புதிய வேளாண் சட்டத்தை கைவிட வேண்டும். டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வேளாண் சட்டங்களை கைவிட வேண்டும். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கைக்கூலியாக இருக்கக்கூடாது. மத்திய அரசு திட்டங்களுக்கு துணைபோகும் மாநில அரசை கண்டிக்கிறோம் என்று கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் சிஐடியூ, ஏஐசிடியூ, தொமுச போன்ற அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகளான ஜெகமுருகன், தர், செந்தில் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Related Stories: