பொதுமக்கள் அவதி சாலை பாதுகாப்பு விழா

சீர்காழி, ஜன. 24: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பேருந்து நிலையம் எதிரே 32வது சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி பெண்கள் பங்கேற்ற ஹெல்மெட் மற்றும் சீட்பெல்ட் அணிவது குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதில் திரளான பெண்கள் பங்கேற்று இருசக்கர வாகனத்தில் பேரணியாக சீர்காழி முக்கிய வீதிகள் வழியாக சென்று காவல் நிலையத்தை வந்தடைந்தனர். பேரணிக்கு வந்த பெண்கள் மத்தியில் சீர்காழி அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் காயத்ரி பேசினார். அதில் பெண்களின் பாதுகாப்பு, பெண் குழந்தைகளை வளர்ப்பது குறித்து அறிவுரை வழங்கினார். சீர்காழி இன்ஸ்பெக்டர் மணிமாறன், சப் இன்ஸ்பெக்டர் நடராஜன், போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன், காவலர் மணிகண்டன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

சீர்காழி புதிய பேருந்து நிலையம் எதிரே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. சீர்காழி மோட்டார் வாகன ஆய்வாளர் சுந்தரராமன் தலைமை வகித்தார். சீர்காழி இன்ஸ்பெக்டர் மணிமாறன் முன்னிலை வகித்தார். போக்குவரத்துத்துறை சப்இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் வரவேற்றார். பேரணியை மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார். நகரின் முக்கிய வீதி வழியாக சென்று மீண்டும் புதிய பேருந்து நிலையத்தை பேரணி வந்தடைந்தது. சீர்காழி சப்இன்ஸ்பெக்டர் நடராஜன், காளிமுத்து, வீரபாண்டியன், மணிகண்டன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

Related Stories: