×

வாக்காளர் தின விழிப்புணர்வு தினத்தையொட்டி மகளிர் குழுவினருக்கு கோலப்போட்டி

கொள்ளிடம், ஜன. 24: கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வாக்காளர் விழிப்புணர்வு தினத்தையொட்டி மாவட்ட மகளிர் திட்டம் சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கான கோலப்போட்டி நடந்தது. ஒவ்வொரு வட்டாரத்திலும் உள்ள மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் ஊராட்சி அளவில் மகளிர் பங்கேற்ற இந்த போட்டியில் கோலப்போட்டி, பேச்சுப்போட்டி நடந்தது. போட்டியை கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயப்பிரகாஷ் துவக்கி வைத்தார்.
இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கபட்டது. ஆணையர் இளங்கோவன், பிடிஓ ஜான்சன், தேர்வுக்குழு உறுப்பினர் சுமதி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லட்சுமி, கோபாலகிருஷ்ணன், ஊராட்சி தலைவர் சந்திரசேகர் மற்றும் மகளிர் சுய உதவி குழுவினர் பங்கேற்றனர்.

Tags : Goal contest ,women ,group ,Voter ,
× RELATED மதுரையில் மீனாட்சியம்மன்...