மீன்களை வேட்டையாட காத்திருந்த நீர்காகங்கள் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் காணொலி காட்சி மூலம் 29ம் தேதி நடக்கிறது

கரூர், ஜன. 24: கரூர் மாவட்ட கலெக்டர் மலர்விழி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக ஜனவரி 29ம்தேதி காலை 11மணியளவில் கலெக்டர் தலைமையில் நடைபெறவுள்ளது. கரூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிக்ள மற்றும் விவசாய சங்க பிரநிதிகள் அந்தந்த வட்டாரத்தில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும், தங்களது கோரிக்கைகளை மனுக்களாக எழுதி அந்தந்த வட்டாரத்தில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் வழங்கலாம்.விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மீது மாவட்ட கலெக்டர் தலைமையிலான அலுவலர்கள் கண்காணித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மனுக்களை அனுப்பி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் விவசாயிகள் குறைதீர்நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: