தாந்தோணிமலை பகுதியில் வடிகாலில் தேங்கியுள்ள கழிவுநீரால் சுகாதார கேடு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கரூர், ஜன. 24: கரூர் நகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை லட்சுமி நரசிம்மன் கோயில் அருகே வடிகாலில் தேங்கியுள்ள கழிவு நீரை அகற்ற சீரான முறையில் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரூர் நகராட்சிக்குட்பட்ட கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில் அருகே லட்சுமிநரசிம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலை ஒட்டி இரண்டு புறமும் குடியிருப்புகள் உள்ளன.இதில், கோயிலை ஒட்டியுள்ள பகுதியில் வழியாக செல்லும் வடிகாலில் கழிவு நீர் தேங்கி இந்த பகுதியில் பல ஆண்டுகளாக சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. இதனை சரி செய்ய வேண்டும் என இந்த பகுதியினர் கோரிக்கை விடுத்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் லட்சுமிநரசிம்மன் கோயில் அருகே வாய்க்காலில் படிந்துள்ள கழிவு நீரை அகற்ற, சீரான முறையில் செல்ல தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என இந்த பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: