×

கரூர் தேசிய நெடுஞ்சாலை நிழற்குடை அருகே டேங்க்குகளில் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை

கரூர், ஜன. 24: கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நிழற்குடையின் அருகேயுள்ள டேங்க்குகளில் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் நகரப்பகுதியை சுற்றிலும் திருச்சி, மதுரை, கோவை, சேலம், நாமக்கல் ஆகிய பகுதிகளுக்கான தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இதில், கரூர் நாமக்கல் இடையே, அய்யம்பாளையம் உட்பட பல்வேறு கிராம பகுதிகளுக்கு பிரிவுச் சாலையோரம் நிழற்குடை அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இதே போல், கரூர் திண்டுக்கல் மற்றும் திருச்சி இடையிலான பிரிவுச் சாலையோரம் நிழற்குடை பயன்பாட்டில் உள்ளது. இந்த நிழற்குடைகளின் அருகிலேயே பயணிகள் பயன்படுத்தும் வகையில் சின்டெக்ஸ் டேங்க் அமைக்கப்பட்டுள்ளது.ஆனால், சின்டெக்ஸ் டேங்க்கில சாலைகள் பயன்பாட்டுககு வந்த சமயத்தில் மட்டும் தண்ணீர் நிரப்பப்பட்டது. அதற்கு பிறகு எந்த டேங்கிலும் தண்ணீர் நிரப்பப்படுவதில்லை. இதனால், கிராம பகுதிகளில் இருந்து நிழற்குடைக்கு வந்து பல்வேறு பகுதிகளுக்கு பேரூந்து ஏறிச் செல்லும் பயணிகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் இரண்டு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் அனைத்து தரப்பினர்களின் நலன் கருதி, டேங்க்குகளில் தண்ணீர் நிரப்ப தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Tags : Karur National Highway ,
× RELATED கிருஷ்ணராயபுரம் அருகே விபத்து பஸ்-பைக் மோதல் கூலித்தொழிலாளி பரிதாப பலி