×

பரிசலில் சென்று மீன் பிடிக்கும் இளைஞர்கள் தமிழகம் முழுவதும் திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்ற மனநிலையில் மக்கள் உள்ளனர்

கரூர், ஜன. 24: கரூர் திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் சம்பந்தமான அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் செந்தில்பாலாஜி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது: கரூர் மாவட்டத்தில் வாக்காளர் சரிபார்க்க கூடிய பணிகளில், சிறப்பு முகாம் நடைபெற்று, சம்பந்தப்பட்ட பூத் லெவல் ஆபிசர்கள் களத்தில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பிஎல்ஏ2 எனப்படும் அரசியல் சார்ந்தவர்கள் உடன் சென்று களப்பணிகள் முடிந்து கடந்த 20ம்தேதி அன்று வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், கரூர் மாவட்டத்தில் 8லட்சத்து 96ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர்.

இந்த பட்டியல் தயாரிக்க கூடிய பணிகள் நிறைவு பெற்று விட்டன. இந்த பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளின் பணிகளும் முடிந்து விட்டது. இன்னும் ஒரே ஒரு பணிகள் அவர்களுக்கு உள்ளன. அதன்படி, தேர்தல் காலத்தில் பூத் சீலிப் வீடு வீடாக சென்று வழங்க வேண்டும். ஆனால், பட்டியல் வெளியிடப்பட்ட மறுநாளே மாவட்ட கலெக்டர், பிஎல்ஒ மீட்டிங் வரச்சொல்லி, வராதவர்களை ஜீப் அனுப்பி வரவழைத்து, அதிமுகவினர் தந்த பட்டியல்களை எடுத்துக் கொண்டு களத்திற்கு சென்று ஆய்வு செய்வதாக சொல்லி, கையெழுத்திட்டு வழங்க வேண்டும் என கூறி உத்தரவு விட்டுள்ளதாக தெரிகிறது.

சில அதிகாரிகள், அங்கேயே, எங்களின் பணிகள் நிறைவுபெற்று விட்டன. இனி எப்படி களத்துக்கு செல்ல முடியும், தேர்தல் ஆணைய வழிகாட்டு நெறிமுறைகளில் அந்த உத்தரவு இல்லை என கூறியுள்ளனர்.மக்கள் மனதில் தமிழகம் முழுவதும் திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்ற மனநிலையில் உள்ளனர். மக்களின் எண்ணங்களை மாற்ற முயற்சிப்பதை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றார். பேட்டியின் போது, மாநில நெசவாளர் அணித்தலைவர் நன்னியூர் ராஜேந்திரன், குளித்தலை எம்எல்ஏ ராமர், மாநில சட்டத்துறை இணைச் செயலாளர் மணிராஜ் உட்பட அனைத்து நிர்வாகிகளும் உடனிருந்தனர்.

Tags : Tamil Nadu ,DMK ,
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...