திமுக மக்கள் கிராம சபை கூட்டம்

நாமக்கல், ஜன. 24: நாமக்கல்லை அடுத்த ஆவல்நாய்க்கன்பட்டியில், ஒன்றிய திமுக சார்பில், மக்கள் கிராமசபை கூட்டம், ஊராட்சி மன்ற தலைவர் பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட பொறுப்பாளர் ராஜேஸ்குமார் கலந்து கொண்டு பேசும்போது, மாவட்டம் முழுவதும் மக்கள் கிராமசபை கூட்டங்களை நடத்தி மக்களின் குறைகளை திமுக கேட்டு வருகிறது. ரேசன் கடையில் தரமான பொருட்கள் வழங்கப்படுவதில்லை. முதியோர் உதவித்தொகை வழங்கப்படுவதில்லை என்ற குற்றசாட்டுகளை பெண்கள் அனைத்து ஊர்களிலும் கூறுகிறார்கள். இன்னும் 4 மாத காலத்தில் தமிழகத்தில் திமுக ஆட்சி அமையும்.

அப்போது மக்களின் அனைத்து குறைகளையும் தலைவர் மு.க ஸ்டாலின் தீர்த்துவைப்பார். அனைத்து தரப்பு மக்களும் இந்த ஆட்சியில் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே வரும் தேர்தலில் மக்கள் திமுகவுக்கு ஆதரவு அளிக்கவேண்டும் என்றார்.

கூட்டத்தில், ஒன்றிய செயலாளர் பழனிவேல், சட்டதிட்டக்குழு உறுப்பினர் நக்கீரன், மாநில மகளிர் தொண்டர் அணி இணைச்செயலாளர் ராணி, பொதுக்குழு உறுப்பினர் டாக்டர் மாயவன், ஊராட்சி மன்ற தலைவர் ராமசாமி, முன்னாள் தலைவர்கள் பழனிசாமி, சூரப்பன், தகவல் தொழில்நுட்ப அணி குணாளன், மகேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: