திமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டம்

ஓசூர், ஜன.24: கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் தளி பிரகாஷ் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை: ஓசூரில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக மாணவரணி சார்பில், மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம், ஓசூர் ராம்நகர் அண்ணாசிலை அருகில் வரும் 25ம் தேதி மாலை 5 மணிக்கு நடக்கிறது. நிகழ்ச்சிக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ராஜா தலைமை வகிக்கிறார். மாநகர திமுக பொறுப்பாளர் சத்யா எம்எல்ஏ வரவேற்கிறார். ஒன்றிய செயலாளர்கள் சீனிவாசரெட்டி, சின்னப்பில்லப்பா, திவாகர், நாகேஷ், நாகன், ரகுநாத், கணேசன், வெங்கடேஷ் உள்ளிட்டோர் முன்னிலை வகிக்கின்றனர். நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் பிச்சாண்டி, வேப்பனஹள்ளி முருகன், தலைமை கழக பேச்சாளர் செந்தூர் பாலகிருஷ்ணன், மணிமேகலை நாகராஜ் உள்ளிட்டோர் பேசுகின்றனர். இதில், மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர், நிர்வாகிகள், சார்பு அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், வார்டு நிர்வாகிகள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>