உலக சிக்கன நாள் விழாவில் மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்

கிருஷ்ணகிரி, ஜன.24: கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், சிறு சேமிப்புத்துறை சார்பில் 2020-21ம் ஆண்டிற்கான உலக சிக்கன நாளையொட்டி நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ், சிறு சேமிப்பு வசூலில் சிறந்து விளங்கிய மாவட்ட, வட்டார மற்றும் நகராட்சி அளவிலான மகளிர் மற்றும் நிலை முகவர்களுக்கு பரிசுத்தொகை, பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. விழாவிற்கு கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை வகித்து, பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

அப்போது அவர் பேசுகையில், ‘பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு சிறு வயது முதலே சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிறுசேமிப்பு திட்டத்தில் 135 சிறுசேமிப்பு மகளிர் முகவர்கள், ₹14.23 கோடி மற்றும் 33 நிலை முகவர்கள் மூலம் ₹40.09 கோடி வைப்புத்தொகை அஞ்சலகத்தில் செலுத்தியுள்ளது பாராட்டுதலுக்குரியது,’ என்றார். விழாவில், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(சிறு சேமிப்பு) தேவராஜன், மாவட்ட சேமிப்பு அலுவலரும், பிடிஓவுமான அசோகன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள்,  கலந்து கொண்டனர்.

Related Stories:

>