தேமுதிக ஆலோசனை கூட்டம்

கிருஷ்ணகிரி, ஜன.24: கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தேமுதிக செயலாளர் அன்பரசன் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதி தேர்தல் ஆலோசனை கூட்டம், நகர செயலாளர் பரந்தாமன் தலைமையில் இன்று(24ம்தேதி) காலை 10 மணிக்கு கிருஷ்ணகிரி வெல்கம் மகாலில் நடக்கிறது. இதேபோல், பர்கூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் ஆலோசனை கூட்டம், ஒன்றிய செயலாளர் அப்பாபிள்ளை தலைமையில் இன்று 12 மணிக்கு போச்சம்பள்ளி ஜெயலட்சுமி மகாலில் நடக்கிறது. இந்த கூட்டங்களில், தேர்தல் பணிக்கு செயலாளர் மணிகண்டன், தேமுதிக மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் கணேசன் ஆகியோர் பங்கேற்று பேசுகின்றனர். எனவே, மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் திரளாக பங்கேற்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>