×

நோய், நொடியிலிருந்து கால்நடைகளை காக்க சிறப்பு வழிபாடு

அரூர், ஜன.24: அரூர் அருகே உள்ள மொண்டுகுழி கிராம மக்கள், தங்களது கால்நடைகளை நோய், நொடிகளிலிருந்து காக்க வேண்டி நேற்று சிறப்பு வழிபாடு செய்தனர். இதற்காக பொது இடத்தில் ஒன்று திரண்ட கிராம மக்கள், அங்குள்ள நொல்லையம்மன் குட்டையில் பச்சை வைத்து கிடா வெட்டினர். பின்னர், அருகிலுள்ள தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோயில் தீர்த்தம், தென்பெண்ணை ஆறு தீர்த்தங்களை  வைத்து, அலங்கரிக்கப்பட்ட சுவாமியை ஊர்வலமாக கொண்டு வந்து சிறப்பு பூஜை செய்தனர். கிராமத்தில் உள்ள ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை கொண்டு வந்து எந்த நோயும் அண்டாமல் இருக்க வேண்டி, சிறப்பு பூஜை செய்து வழிபட்டு, புனித நீரை தெளித்தனர். தொடர்ந்து தீர்த்தத்தை வீட்டிற்கும் எடுத்துச் சென்று குடும்ப உறுப்பினர்கள் மீது தெளித்தனர். இதன்மூலம் கால்நடைகள் மட்டுமின்றி மக்களையும் நோய், நொடிகள் அண்டாது என்ற நம்பிக்கை உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்று ஆட்டிப்படைத்த நிலையில், தங்கள் கிராமத்தில் யாருக்கும் அந்த நோய் தாக்குதல் வரவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா