×

கிழக்கு-மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

தர்மபுரி, ஜன.24: தர்மபுரி மாவட்டத்தில் வரும் 1ம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மக்களின் குறைகளை கேட்டறிய சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்கான அவசர ஆலோசனை கூட்டம் இன்று(24ம்தேதி) நடக்கிறது. இதுகுறித்து தர்மபுரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர்கள் தடங்கம் சுப்ரமணி எம்எல்ஏ, இன்பசேகரன் எம்எல்ஏ ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி மாவட்டத்தில் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிய, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரும் 1ம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதுதொடர்பாக கிழக்கு, மேற்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் இன்று(24ம் தேதி) காலை 11 மணிக்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடக்கிறது. இக்கூட்டத்தில் இந்நாள், முன்னாள் எம்பி, எம்எல்ஏக்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர்  செயலாளர்கள், பொறுப்பாளர்கள், பொறுப்புக்குழு உறுப்பினர்கள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.

Tags : East-West District DMK Executive Committee Meeting ,
× RELATED கோயில் விழா பாலக்கோட்டில் 11ம் தேதி உள்ளூர் விடுமுறை