×

விவசாய தொழிலாளர் சங்க நிர்வாக குழு கூட்டம்

தர்மபுரி, ஜன.24: தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின், தர்மபுரி மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் நேற்று தர்மபுரியில் நடந்தது. மாவட்ட தலைவர் மாதையன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பிரதாபன் பேசினார். கூட்டத்தில், தர்மபுரி மாவட்டத்தில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டத்தின் கீழ், ₹770 கோடியில் 10 ஆயிரம் வீடுகள் கட்டப்பட உள்ளது. இதையொட்டி, மாவட்டம் முழுவதும் வீடு, வீட்டு மனை இல்லாத நிலமற்ற விவசாய தொழிலாளர்கள் பல ஆயிரம் ஏழை மக்கள் விண்ணப்பம் கொடுத்துள்ளனர். எனவே, விண்ணப்பித்த அனைவரையும் பயனாளிகளாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் ராஜகோபால், ராஜூ, பச்சாகவுண்டர், கிருஷ்ணன், ராமச்சந்திரன், வத்தல்மலை ரங்கன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Agricultural Workers Union Executive Committee Meeting ,
× RELATED கோயில் விழா பாலக்கோட்டில் 11ம் தேதி உள்ளூர் விடுமுறை