×

பாலக்கோடு அரசு பள்ளியில் ₹47.30லட்சத்தில் கூடுதல் அறைகள் கட்டும் பணி அமைச்சர் தொடங்கி வைத்தார்.

தர்மபுரி, ஜன.24: பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ₹47.30லட்சம் மதிப்பில் கூடுதல் அறைகள் கட்டும் பணி தொடக்கவிழா நேற்று நடந்தது. கலெக்டர் கார்த்திகா தலைமை வகித்தார். உயர்கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் அன்பழகன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, சப் கலெக்டர் பிரதாப், முதன்மை கல்வி அலுவலர் கீதா, பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் தொமு நாகராஜன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ரங்கநாதன், மாவட்ட கல்வி அலுவலர் சண்முகவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Minister ,rooms ,Balakod Government School ,
× RELATED சுற்றுலா தளங்களை சுற்றிப்பார்க்க...