மின் வேலியில் சிக்கி 5 ஆடுகள் பலி

மொரப்பூர் அடுத்த குண்டல்பட்டி வனப்பகுதியில் வனவிலங்குகள் அதிகளவில் உள்ளன. இவற்றை வேட்டையாடுவதற்காக வனப்பகுதியில் சிலர் மின்வேலி அமைத்து வருகின்றனர். இந்த மின்வேலிகளில் அவ்வப்போது ஆடு, மாடுகளும் சிக்கி உயிரிழந்து வருகின்றன. கடந்த 21ம் தேதி, குண்டல்பட்டிக்கு வனப்பகுதிக்கு மேய்ச்சலுக்காக சென்ற 5 ஆடுகள், மின்வேலியில் சிக்கி உயிரிழந்துள்ளன. இதனால், கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எனவே, முறைகேடாக மின்வேலி அமைத்து வன விலங்குகளை வேட்டையாடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

விவசாயிகளுக்கு விழிப்புணர்வு

தர்மபுரி அருகே ராஜாதோப்பு கிராமத்தில், கோவை தனியார் வேளாண் கல்லூரி மாணவர்கள் சார்பில், இயற்கை உயிரி உரம் மூலம் அதிக மகசூலை எவ்வாறு பெறுவது என்பது குறித்து விழிப்புணர்வு முகாம் நடந்தது. நெல், வாழை, பருத்தி, கரும்பு உள்ளிட்ட பயிர்களில் அதிக மகசூல் பெறும் வழிமுறைகள் குறித்தும், வேளாண் கல்லூரி மாணவர்கள் விளக்கினர். முகாமில் ராஜாதோப்பு மற்றும் சுற்றுப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

10 பேருக்கு கொரோனா

தர்மபுரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 10 பேர் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து, அனைவரும் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் மொத்தம் 6563 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 6474 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 9 பேர் குணமாகி வீட்டிற்கு சென்றனர். மொத்தம் 35 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 54 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

Related Stories: